உங்களது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி முழுமையாக வெளியேற 3 நாட்கள் மட்டும் இந்த ஜூசை குடித்து வாருங்கள். கிடைக்கும் பலன் உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.
இந்த ஜூஸ் ஆனது கல்லீரலில் சுற்றியுள்ள கொழுப்புகளை நீக்கி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
நமது உடலின் பெரிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் நமது உடலில் கொழுப்புகள் மற்றும் புரதங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் வேலையை செய்கிறது. அதனால் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கல்லீரலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதோ கல்லீரலை பாதுகாக்கும் ஒரு அற்புத ஜூஸ்.
தேவையான பொருட்கள்:
1. கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
2. பூண்டு - 2 பல்
3. எலுமிச்சை சாறு - அரை மூடி
கொத்தமல்லி தழைகளை உப்பு நீரில் நன்றாக அலசி கட் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் பூண்டு பல் தோல் உரித்து சேர்த்துக் கொள்ளவும்.
இதை நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதில் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.
இதை காலை வெறும் வயிற்றில் அரை டம்ளர் தண்ணீர் குடித்து முடித்த பிறகு பருக வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வர உங்களது கல்லீரல் ஆனது 100 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது.
*** கொத்தமல்லி தழையில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. வாயு பிரச்சனை மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டி ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்.
*** உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் தடுத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். புதிய ரத்தத்தை உருவாக்கும்.
*** பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அதி அற்புதமான பொருள். மேலும் இதில் உள்ள சல்பர் கல்லீரலின் என்சைம் உற்பத்திக்கு உதவுகிறது.
100 வேலைகளை செய்யக்கூடிய கல்லீரலை பாதுகாக்க நாம் மதுகுடித்தல், புகைபிடித்தல், உடல் எடை அதிகரித்தல், அதிக சர்க்கரை போன்றவற்றால் கல்லீரல் பாதிப்படைவதால் இவற்றை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment