மனதுக்கும், உடலுக்கும் சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய அற்புதமான பானம் டீ. காலையில் எழுந்தவுடன் பலருக்கும் டீ அருந்தாவிட்டால், அன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளாக இருக்காது.
அந்தளவுக்கு இந்தியர்களையும், டீயையும் பிரிக்க முடியாது. டீ குடிக்கும் போது ,சில உணவு பொருட்களை சேர்த்து உண்பதால், நம் உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்களை கிடைப்பதில் தடை ஏற்படலாம். எனவே எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பது குறித்து பார்ப்போம்.
1.பொரித்த உணவுகள் : பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடும் போது செரிமானத்துக்கு நேரம் எடுத்து கொள்ளுமென்பதால், இயல்பாகவே வயிறு மந்தமாக இருப்பதை உணர்வீர்கள். டீ அருந்தும் போது, விரைவாக செரிமானமாக உதவும்.
ஒரே நேரத்தில் இரண்டையும் எடுத்து கொள்வது, அஜீரண கோளாறை ஏற்படுத்தும்.
2. மஞ்சள் கலந்துள்ள உணவுகள் : மருத்துவ குணம் மிக்க மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது . இது டீ அருந்துவதால், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் டன்னின்ஸ் என்ற நோயெதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைப்பதை தடுக்க கூடும். மேலும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்பட்டு பல் சொத்தையை தடுக்கும்.
3. நட்ஸ் வகைகள் : நட்ஸ் வகைகளில் பைடேட்டுகள் உள்ளன. இவை டீ அருந்தும் போது சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு இரும்பு சத்தை உறிஞ்சுவதை தடுக்க கூடும்.
4. இனிப்பான உணவுகள் : கேக், பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகளில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், டீ உடன் அருந்தும் போது ரத்தத்தில் சர்க்கரையில் அளவு திடீரென அதிகரிக்க கூடும். உடலில் உள்ள ஆற்றலை வீணடிப்பதுடன், பல ஆரோக்கிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.
5. பீன்ஸ் : பீன்ஸ் வகைகளில் பைடேட்டுகள் உள்ளன. டீ அருந்தும் போது பீன்ஸ் சாப்பிட்டால் நம் உடலுக்கு இரும்பு சத்து கிடைப்பதை தடுக்க கூடும்.
6. சிட்ரஸ் பழ வகைகள்: டீ அருந்தும் போது, ஆரஞ்சு, லெமன் போன்ற சிட்ரஸ் பழ வகைகள் சாப்பிடுவதை, அறவே தவிர்க்க வேண்டும்.
லெமன் டீ அருந்தும் போது, வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து செரிமான கோளாறை ஏற்படுத்தலாம். பொதுவாக உணவு உட்கொண்ட அரை மணி நேரத்திற்கு பின்னர் டீ அருந்தலாம். அதனால் டீயில் அதிகளவு உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களை முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment