Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 20, 2023

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.21 - 27


துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: எதையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு இந்த வாரம் நண்பர்களுடன் இணைந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும்.

பெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். கலைத்துறையினர் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: அறிவும், ஆற்றலும் ஒருங்கே பெற்ற உங்களுக்கு இந்த வாரம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள்.

புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும்.

பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ), ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: அடக்கமான சுபாவம் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் சுபச்செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ராசிக்கு 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மனத்தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம்.

பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு யோக பலன்கள் காணப்படும். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: குரு பகவானை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்

No comments:

Post a Comment