Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 20, 2024

10 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு: தமிழக வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

10 வேளாண் விலை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2024- 25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு* ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்துக்கு, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு*பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப் பண்ணைகள் அமைத்திட 2.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு *உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு 10,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு *தமிழக அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு*ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்தை 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு *பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப் பண்ணைகள் அமைத்திட 2.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு *உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு 10,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு *தமிழக அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு* மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.*ரூ.20 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு*உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறப்பால் 25 ஆயிரம் ஏக்கர் காக்கப்பட்டது.*19 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுகைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்*நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுகை அமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு*மண்வளம் குறித்து தெரிந்து கொள்ள தமிழ் மண்வளம் இணைய தளம் வாயிலாக உரப்பரிந்துரை வழங்கப்படும்*27000 ஏக்கர் களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு*மண்புழு உரம் தயாரிக்க 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5 கோடி நிதி*வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்ப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்படும்.*உயிர்ம வேளாண்மை இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க ரூ.38 லட்சம் ரூபாய்*5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் 2 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு*2482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோனைக்கு ரூ.6.27 கோடி *10 லட்சம் வேப்ப மரக்கன்றகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு*10 உழவர் அங்காடிகள் 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்*ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்ய ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு*அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சி திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்*கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்த ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்*ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் காக்க ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு*சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி*அதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு*பயிர் காப்பீடு திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும்.*200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தியை மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு*சீவன் சம்பா என்ற பெயரில் நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் நெல் ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்*உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு*14 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு அமைக்க ரூ.42 கோடி*உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு*நெல் ஜெயராமன் மரபு சார் நெல்ரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாம்பரிய நெல் பாதுகாக்கப்படும்.*குமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு*2482 கிராமங்களில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு*சிறு தானியங்கள், பயிறு வகைகள் எண்ணெய் வித்துகள் பயிரிட ரூ.36 கோடி ஒதுக்கீடு*உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்க்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு*காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்கிட ரூ.1.48 கோடி*சாகுபடி பரப்பு குறைந்துள்ள துவரை கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்ய ரூ.17.5 கோடி ஒதுக்கீடு*ஆமணக்கு சாகுபடியை 1500 ஏக்கர் அளவுக்கு அதிகரிக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு*தரமான விதைகளை பயன்படுத்தி மகசூலை 15 % அளவுக்கு அதிகரிக்கப்படும்*சூரிய காந்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு*சோளம், கம்பு, கேழ்வரகு குதிரைவாலி தினை உள்ளிட்டவற்றைின் சாகுபடியை அதிகரிக்க தமிழக சிறுதானிய இயக்கம்.*பட்டதாரிகள் வேளாண் சாகுபடி தொழில் செய்ய ரூ.1 கோடி மானியம்*ரூ.65.30 கோடியில் தமிழக சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும். *குறைந்த நீர் தேவைப்படும் வகையில் 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் ரூ.12 கோடியில் செயல்படுத்தப்படும்.*எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.42 கோடி*எள் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் 25 ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக பயிர் செய்ய 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு*பயிர்களுக்கு நுண்ணூட்டச் சத்துகளை அளிக்கும் திரவ உயிர் உரம் ரூ.7.5 கோடி ஒதுக்கீடு*கரும்பு சாகுபடி செலவை குறைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.7.92 கோடி ஒதுக்கீடு*சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்த ரூ.12.40 கோடி நிதி ஒதுக்கீடு*கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு*கரும்பு டன் ஒற்றுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கீடு*2.22 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க 777.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு*நிலத்தடி நீர் குறைத்து வரும் மாவட்டங்களுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.*ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு*விவசாயிகளுக்கு நடவுச் செடிகள் வழங்க ரூ.2.70 கோடி மானியம்*வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3.64 கோடி*ஆதி திராவிட சிறு குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி*முந்திரி சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு*செங்காந்தள், நித்திய கல்யாணி போன்ற மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி *தரமான விதைகளை பயன்படுத்தி மகசூலை 15 சதவீதம் அதிகரிக்க ஊக்குவிக்கப்படும்.*தென்னை சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிய ரூ.12.50 கோடி ஒதுக்கீடு*வாழை மரங்கள் காற்றில் சாய்வதை தடுக்க 3500 ஏக்கரில் கம்பு மூலம் முட்டு கொடுக்க மானியம்.*சிறுதானியங்கள் பயிறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் பயிரிட 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு *எண்ணெய் வித்துக்கள் பயிர்களின் சாகுபடி விரிவாக்கம் செய்திட 45 கோடி நிதி ஒதுக்கீடு*கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக ஆய்வகம் அமைக்கப்படும்.தமிழகத்தில் 1,564 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன; 4,773 குளங்கள், ஊரணிகள் தூர்வாரப்பட்டுள்ளன.பட்டதாரி இளைஞர்களுக்கு புதிய திட்டம்*பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் புதிய மானிய திட்டம் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது; பட்டதாரி இளைஞர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது*ஆதி திராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்க 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு *முக்கனி மேம்பாட்டுக்காக சிறப்பு திட்டத்தை செயல்படுத்த 4.35 கோடி நிதி ஒதுக்கீடு *வறண்ட நிலங்களில் 23.64 கோடியில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்*ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்திற்கு 36.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு*பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தர்மபுரி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டு பணிகளுக்காக 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.*தர்மபுரி, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விதை பரிசோதனை நிலையங்களுக்கு NABL தரச்சான்று வழங்கப்படும்.*ஈரோடு, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் 2.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.*வேளாண் கண்காட்சிகள் நடத்த 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.*100 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை புதுப்பிக்க ரூ.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

புவிசார் குறியீடு தமிழக வேளாண் பட்ஜெட்டில், 

சத்தியமங்கலம் செவ்வாழை, 

கொல்லிமலை மிளகு, 

மீனம்பூர் சீரக சம்பா, 

ஐயம்பாளையம் நெட்டை தென்னை, 

உரிகம் புளி, 

புவனகிரி மிதி பாகற்காய், 

செஞ்சோளம், நெல்லை அவுரி, 

ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை 

ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற அரசு முயற்சி செய்யும் எனவும், இதற்கு ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment