Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 30, 2024

வாரிசு சான்றிதழ் பெறுவதில் புதிய நடைமுறை வந்தாச்சு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!


குடும்பத்தில் உள்ள ஒரு நபர் அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய சொத்துக்கள் வாரிசுகளை அடையாளப்படுத்துவதற்காக வாரிசு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தகுதியான அனைத்து வாரிசுகளும் இந்த வாரிசு சான்றிதழை வைத்திருப்பது அவசியம். இந்த சான்றை வைத்து காப்பிட்டு உரிமை கோருவது, வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை போன்ற நிலுவை தொகைகளை அரசிடமிருந்து பெறுவது, மாநில அரசு மத்திய அரசு ஊழியர் இறந்து விட்டால் அவருடைய சம்பள நிலுவைகளை பெறுவது போன்ற பல செயல்களை செய்வதற்கு தேவைப்படும்.

கடந்த 2022 ஆம் வருடம் இந்த சான்றிதழ் வழங்குவதில் புதிய முறையை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது இரண்டு வருடத்திற்கு பிறகு வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதலில் மாற்றங்களை செய்து தமிழக அரசின் வருவாய் மற்றும் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது . இதுகுறித்த மேலும் விவரத்தை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment