Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 30, 2024

'இனி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் தேசிய தகுதி தேர்வு கட்டாயம்' - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பு!

தேசியத் தகுதி தேர்வினை (NET) பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது. இது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இளநிலை ஆராய்ச்சியாளருக்கான (Junior Research Fellowship) உதவித்தொகை அளிக்கும் வகையிலும், உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வுக்காகவும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இப்போது அதில் கூடுதலாக தேசிய கல்விக் கொள்கையின் மிக முக்கிய அம்சமான 'ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு' எனும் திட்டத்தின் கீழ் முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் இனி தேசிய தகுதித் தேர்வு கட்டாயம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு தேர்வுமுறை 100% மெரிட் மூலம் மட்டுமே இருந்தது. அதிலும் ஒருமுறை தேர்ச்சி பெற்றாலே வாழ்நாள் முழுவதற்கும் செல்லுபடியாகும் என்ற முந்தைய நிலையை மாற்றி, முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கான தேர்வுகள் 70% மெரிட் மூலமும் 30% நேர்காணல் மூலமும் நடைபெறும் என்றும், ஓராண்டு காலத்திற்கு மட்டுமே இந்த தேர்ச்சி செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சி பெற்ற ஓராண்டு காலத்திற்குள் முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கை நடைபெறவில்லை என்றால் மீண்டும் மீண்டும் தேசிய தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய சூழல் உருவாகும். மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தனக்கேயுரிய முறையில் நுழைவுத்தேர்வினை நடத்தி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கையை இதுகாறும் நடத்தி வந்ததை மாற்றி இனி தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு' திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு.

No comments:

Post a Comment