Join THAMIZHKADAL WhatsApp Groups
கிராமப்புற ஏழை விதவைகள் / கைவிடப்பட்ட/ ஆதரவற்ற பெண்களின் மேம்பாட்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்!
நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும், கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த/ஆதரவற்ற / கைவிடப்பட்ட 38,700 பெண் பயனாளிகளுக்கு 4 வார வயதுடைய 40 நாட்டினக் கோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது.
ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் மொத்தம் ரூ.624 லட்சம் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
ஒரு பயனாளிக்கு 50% பின் மானியமாக ரூ.1600/- வழங்கப்படுகிறது.
சென்னையை தவிர (புனித தோமையார் மலை) அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் நன்மைகள் - முட்டைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், வளர்ந்த பெண்கோழிகள் (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும், ஒரு பயனாளி வருடத்திற்கு ரூ. 20,000 முதல் ரூ.25,000 வரை வருமானம் ஈட்டலாம்.
No comments:
Post a Comment