Join THAMIZHKADAL WhatsApp Groups
விவசாயிகள் அக்ரி ஸ்டாக் திட்டத்தில் வருகிற 31-ம் தேதி பதிவு செய்ய கடைசி நாள் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வே ளாண்மை உதவி இயக்குனர் சந்திரமாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
ஒட்டன்சத்திரம் வட்டாரத்திற் குட்பட்ட விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர் புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டி யுள்ளது இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க் கும் வகையில் அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களை யும்மின்னனு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம்( அக்ரி ஸ்டாக்) செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
தற்பொழுது விவசாயிகள் பதிவு விவரங்களுடன் ஆதார் எண், கைபேசி எண், நில உடமை விபரங்கள் விடுபடாமல் இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் விவசாயிகள் பொது இ-சேவை மையம் சென்று அங்கு நில உடமை விபரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார்எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஏற்படுத்தப்படும்.
2025-2026 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (pmkisan) பயிர் காப்பீடு திட்டம்(pmkisan) போன்ற ஒன் றியம் மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளி தில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம் எனவே விவசாயிகள் தங்களது கிரா மங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் 5 நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங் களை அளித்து எவ்வித கட்டணம்மின்றி 31. 03. 2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment