Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 31, 2025

ஜூன் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஜூன் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழா நாளை முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சேர்கிறார்.

பிறகு அன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News