Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 10, 2025

பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்


தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் வருகிற நவ. 23, 24 தேதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பொருட்டு பள்ளி பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி புதிய பாடத்திட்டத்தை உருவாக்க மாநில திட்டக்குழு இயக்குநர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வருகிற நவ. 23, 24 ஆம் தேதிகளில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பொருட்டு பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்போது நவீன புதிய துறைகள் பற்றிய பாடத்திட்டங்களும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது

No comments:

Post a Comment