Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 10, 2025

கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து: கட்டணங்களை திருப்பித் தர யுஜிசி உத்தரவு



சேர்க்​கையை ரத்து செய்த மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணத்தை திருப்​பித் தராத, உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று யுஜிசி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்பு: கல்​லூரி​களில் சேர்ந்து குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் சேர்க்​கையை ரத்து செய்​து​ விட்ட மாணவர்​களுக்கு உரிய விதி​களின்​படி அவர்​கள் செலுத்​திய கட்​ட​ணங்​களை திருப்​பித் தர வேண்​டும். இதற்​காக யுஜிசி​யால் 2018-ல் வெளி​யிடப்​பட்ட கொள்​கை, கடந்த கல்​வி​யாண்​டுடன் காலா​வ​தி​யாகி​விட்​டது.

இதையடுத்து புதிய கொள்கை வகுக்​கும் வரை நடப்பு கல்​வி​யாண்​டிலும் அதே கொள்​கையை கல்வி நிறு​வனங்​கள் தொடர வேண்​டும். அதன்​படி, கல்​லூரி சேர்க்​கையை ரத்து செய்த மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணம், சான்​றிதழ்​களை கல்​லுாரி நிர்​வாகங்​கள் உடனடி​யாக திருப்பி ஒப்​படைக்க வேண்​டும். இந்த விதி​களை மீறும் கல்வி நிறு​வனங்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

No comments:

Post a Comment