2026 பொங்கல் பண்டிகைக்காக, அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்க பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கன் விநியோகம் ஜனவரி மாத முதல் வாரத்தில் வீடு வீடாக நடைபெறும். ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக டோக்கன்களை வழங்குவார்கள். பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், இலவச வேட்டி மற்றும் சேலை அடங்கும். ஜனவரி 10 ம் தேதி முதல் பெரும்பாலான மக்களுக்கு பரிசு சென்றடையும் வகையில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



No comments:
Post a Comment