Tuesday, April 16, 2024

ஏப்ரல் 23ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல்12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெறும்.


சித்திரை திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப்போது மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்.ஏப்ரல் 21ம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்பட உள்ளார். ஏப்ரல் 22ம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.


இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 11ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News