Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 21, 2019

"இனி நீங்களும் பேராசிரியர்கள் தான்" புதிய அரசனை வெளியீடு .!!


தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.




தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அதாவது கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் 4054 பேரை நிரந்தரப்படுத்த வேண்டும், இவர்களுக்கான ஊதியத்தை யுஜிசி விதிகளின்படி உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்து வருகின்றன.




குறிப்பாக 10 ஆண்டுக்கு மேலாக கவுரவ விரிவுரையாளராக பணியாற்றியவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் அவர்களை தேர்வு நடத்தி நிரந்தரப்படுத்துவதற்கான வழிமுறையை உயர்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் 647 ஆசிரியர் பணியை நிரந்தரபடுத்த தேர்வு நடத்தும் அரசாணையை உயர்கவித்துறை வெளியிட்டுள்ளது.