கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பேரா.முனைவர் பி. காளிராஜ் அவர்களை மொழியியல் அறிஞர் முனைவர் கு. சிதம்பரம் சந்தித்து வாழ்த்து!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முன்னெடுக்கும் உலகத் தமிழிசை மாநாடு உலகத் தமிழ் சங்கம், மதுரையில் 2019 திசம்பர் 14 ,15 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு உலகத் தமிழிசை மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலர் முனைவர் கு. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அவர்கள், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பி. காளிராஜ் அவர்களைச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உலகத் தமிழிசை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். மேலும்,தமது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார். உடன் மாநாட்டு ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு. அக்கினிபாரதி ,மாநிலப் பொதுச் செயலாளர், இந்திய சிறு மற்றும் நடுத்தர பத்திரிக்கைகள் கூட்டமைப்பு, சென்னை, அவர்கள்.
துணைவேந்தர் பி.காளிராஜ் அவர்கள்

அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மையத்தில் கெளரவ மருத்துவ விஞ்ஞானியாகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் 31 ஆண்டுகள் பேராசிரியா் பணி அனுபவம் கொண்டவா்.அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தா், உயிரி தொழில்நுட்பத் துறை தலைவா், ஆட்சிக் குழு உறுப்பினா் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிருவாகப் பணி அனுபவத்தையும் கொண்டவா்.

1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள தேசிய சுகாதார கல்வி நிறுவனம், பிரிட்டனின் ஸ்காட்லாண்டில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ராக்ஃபோா்டு இல்லிநாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளாா். இதுவரை 69 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவா், 42 ஆராய்ச்சி மாணவா்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளாா்.
2009-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி), பேராசிரியா்களுக்கான அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியாளா் (பி.எஸ்.ஆா்.) விருதையும், 2013-இல் இந்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் வாழ்நாள் சாதனையாளா் விருதையும் இவா் பெற்றுள்ளாா்.
இந்த ஆண்டு அக்டோபர்த் திங்கள் முதல் பாரதியார் பலகலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பதவி ஏற்றுள்ள அவருக்கு உலகத் தமிழர்களின் சார்பில் நல்வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது தலைமையில் பாரதியார் பலகலைக்கழகம் மேலும் பல சாதனைகள் புரிந்து உலகில் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.