Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

வரலாற்றில் இன்று 11.12.2019

டிசம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 345 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1282 – வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார்.
1789 – ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
1816 – இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.
1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது.
1917 – பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து ஜெருசலேமை மீட்டன.
1927 – சீனாவின் குவாங்சூ நகரை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத் என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.
1931 – ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றுக்கு தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
1936 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னன் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தார்.
1937 – எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கிய அமெரிக்காமீது போரை அறிவித்தன.
1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.
1958 – அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1964 – நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
1972 – அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.
1981 – எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
1993 – மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – உருசியவின் அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் உருசியப் படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார்.
1998 – தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்

1781 – சர் டேவிட் ப்ரூஸ்டர், ஸ்காட்லாந்து இயற்பியலாளர். (இ. 1868)
1803 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரெஞ்சு இசையமைப்பாளர் (இ. 1869)
1843 – ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளரும் மருத்துவரும் (இ. 1910)
1882 – மாக்ஸ் போர்ன், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் விருதாளரும், (இ. 1970)
1882 – சுப்பிரமணிய பாரதி, கவிஞர் (இ. 1921)
1890 – மார்க் டோபே, அமெரிக்கப் பண்பியல் வெளிப்பாட்டிய ஓவியர் (இ. 1976)
1911 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்தியப் எழுத்தாளர் (இ. 2006)
1918 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 2008)
1931 – ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990)
1935 – பிரணப் முக்கர்ஜி, இந்திய அரசியல்வாதி
1951 – பீட்டர் டி. டேனியல்ஸ், மொழியியல் அறிஞர்
1954 – பிரசந்தா, நேபாளப் பிரதமர்
1958 – ரகுவரன், நடிகர் (இ. 2008)
1969 – விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர்
1980 – ஆர்யா, தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்

1937 – ஜான் ஆன்வெல்ட், எஸ்தோனியாவின் தலைவர் (பி. 1884)
2004 – எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916)

சிறப்பு நாள்

புர்கினா பாசோ – குடியரசு நாள் (1958)