Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 21, 2019

இது புதிய அறிவிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை


தொழிலாளர் சேமநல நிதி அல்லது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.



அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி அரசாங்கம், தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் தொழிலாளர் சேமநல நிதி திட்டம். இந்தியாவில் தொழிலாளர் சேமநல நிதி 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் இதனோடு சேர்த்து இந்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளம் (Basic Salary), அகவிலைப்படியில் (Allowances) 12% தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் வழங்கும்.



தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காகவும், தொழிலாளர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு 9.5% வட்டி தரப்படுகிறது.

தொழிலாளர் சேமநல நிதிக் கணக்குகளை CAG எனப்படும் இந்திய அரசுக் கணக்கு மற்றும் தணிக்கை நிறுவனம் (Comptroller and Auditor General of India) நிர்வகிக்கிறது. ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஒரு கணக்கு எண் வழங்கப்படும். அவர்கள் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகை அவர்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் 280 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant

காலியிடங்கள்: 280

தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்



வயதுவரம்பு: 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.44,900 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2019