Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 13, 2019

நீர் செயற்கைக்கோள் - 30 கண்டுபிடித்து விண்ணில் வெற்றிகரமாக ஏவிய வெள்ளியணை அரசுப் பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்கள்


நீர் செயற்கைக்கோள் - 30 கண்டுபிடித்து விண்ணில் வெற்றிகரமாக ஏவிய வெள்ளியணை அரசுப் பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்கள் இன்று (12.08.2019) காலை 4.50 மணிக்கு கரூர் வந்தடைந்தனர் - கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலுர் மற்றும் கரூர் மாவட்ட கல்வி அலுவலர், குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் சிறப்பான வழிகாட்டுதல் மற்றும் பாராட்டுக்கள்.

நீர் செயற்கைக்கோள் 30 கண்டுபிடித்த வெள்ளியணை அரசுப் பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்களை 09.08.2019 அன்று நேரில் வாழ்த்துவதற்காக *கரூர் மாவட்ட கல்வி அலுவலர் உயர்திரு சா .சிவராமன் ஐயா அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தார்.



பள்ளியில் இதுவரை உருவான 360 இளம் விஞ்ஞானி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும், இளம் விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வகத்தையும் பார்வையிட்டு கிராமப் புற அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் செயல்பாடுகளையும் ,அதன் மூலம் சமுதாயத்தில் மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய செயல்பாடுகளையும் பார்வையிட்டு பெரிதும் பாராட்டினார்.

மேலும் நீர் செயற்கைக்கோள் - 30 கண்டுபிடித்த மாணவர்களை பாராட்டியதுடன் *அறிவியல் துறையில் சாதிக்க விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவியல் ஒளி,தூளிர், ஜந்தர் மந்தர், கல்விச் சுடர், விந்தானச் சிறகுகள், பத்திரிக்கைச் செய்திகளை தொடர்ந்து கற்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் அறிவியல் செயல்பாடு சிறந்து விளங்கும் என அறிவுரை கூறி வாழ்த்தினார்கள்.

மேலும் சிறுசேரியில் சமூக ஆர்வலர் திரு.உமாசங்கர் அவர்களின் தொடர்பு எண்ணை ஐயா அவர்கள் வழங்கினார்கள். நாங்கள் சென்னை சென்ற ஞாயிறு (10.08.2019) காலை 4.30 மணி முதல் இன்று கரூர் மாவட்டம் வரும் வரை திரு.உமாசங்கர் அவர்கள் சிறப்பான வழிகாட்டல் செய்து மாணவர்களை அவரது வீட்டில் (சிறு சேரி) தங்க வைத்து உணவு வழங்கி, மாணவர்களுடனே மாலை 8.30 வரை இருந்தார் . சிறப்பான ஓர் சமூக ஆர்வலர் திரு.உமாசங்கர் அவர்களை அடையாளம் காட்டிய கரூர் மாவட்ட கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும், 06.08.2019 அன்று பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களை வாழ்த்திய கரூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும், குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



மேலும் கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன்களை உலகறியச் செய்த தினத்தந்தி ,தினமலர், தினமணி , இந்து தமிழ் திசை, தினகரன் ,காலைக் கதிர், மாலைமுரசு ஆகிய தமிழ் நாளிதழ்கள், Indian Express , Times of India, Deccan Cronicle , The Hindu ஆகிய ஆங்கில நாளிதழ்கள், தினமலர் .com, விகடன்.com, ஆகிய இணைய வழி செய்தி ஊடகங்களுக்கும், சன் டிவி, ஜெயா டிவி, புதிய தலைமுறை, சத்தியம் டிவி, நியூஸ் 7, வேந்தர் டிவி, இமயம் டிவி, தந்தி டிவி, மாலைமுரசு , ராஜ் நியுஸ், பாலிமர் டிவி உள்ளிட்ட 15 தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், சிறப்பான வழியனுப்பும் விழா நடத்தி மாணவர்களை வழியனுப்பிய, வெள்ளியணை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் களுக்கும், தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து, பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்த அனைத்து முகநூல், மற்றும் கட் செவி அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்.

















நன்றியுடன்
கனவு ஆசிரியர் பெ.தனபால்,
(நீர் செயற்கைக்கோள் 30 வழிகாட்டி ), பட்டதாரி ஆசிரியர் அறிவியல்,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வெள்ளியணை, கரூர் மாவட்டம்