Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 13, 2019

அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு!!


உத்தரபிரதேசத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்கள் அளித்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதுடன் இதுவரை பெற்ற ஊதியத்தையும் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


உ.பி.யில் உள்ள அரசுப் பள்ளி களில் கல்வி மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகக் கருதப்படுகிறது. இதை சரிசெய் யும் பணியில் பாஜக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற் காக, ஆசிரியர்கள் அன்றாடம் பள்ளிக்கான வருகையை மூன்று முறை ‘செல்பி’ எடுத்து அனுப்பி பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரது சான் றிதழ்களை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது. இதில் சுமார் 4,000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் அளித்து அரசுப் பள்ளியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.


இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்ச ரான டாக்டர் சதீஷ் சந்திர துவேதி கூறும்போது, “பல வருடங்களாக போலி ஆசிரியர்கள் மீது வந்து கொண்டிருந்த புகார்கள் மீது இதுவரை எந்த அரசும் நட வடிக்கை எடுக்கவில்லை.
இதற்காக எங்கள் அரசு முதன்முறையாக சிறப்பு காவல் படையினர் மூலம் நடவடிக்கை எடுத்து, இதுவரை 4,000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். இவர்களில் 1,300 ஆசிரியர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க உத்தரவிடப்பட் டுள்ளது” எனத் தெரிவித்தார்.


உ.பி.யின் பள்ளிகளில் உள்ள போலி ஆசிரியர்கள் ஆயிரக்கணக் கான எண்ணிக்கையில் பல வருடங்களுக்கு முன்பாகவே பணியில் சேர்ந்துள்ளனர். எனினும், இவர்கள் மீது வகுப்புகள் எடுப்பது, பள்ளி வருகை உள்ளிட்ட எந்த புகாரும் அரசுக்கு வரவில்லை. இதனால், நடவடிக்கையில் இருந்த தப்பி வந்த ஆசிரியர்கள் தற்போது சிக்கி வருகின்றனர். உ.பி.யின் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குக்கு பின் இந்த நடவடிக்கையை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது.


உ.பி.யின் பலியாவில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் நாராயண் யாதவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பெற்ற ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட். சான்றிதழ் போலியாக இருந்துள்ளது. இதையடுத்து அவரது இடத்தின் வாய்ப்பை இழந்தவர்களில் ஒருவரான டர்கேஷ்வர்சி என்பவர் நாராயண் யாதவ் மீது வழக்கு தொடுத்திருந்தார்.
இதன் மீதான நீதிமன்ற உத்தரவில் நாராயண் யாதவ் பெற்ற 20 வருட ஊதியமும் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையே மற்ற போலி ஆசிரியர்களுக்கும் அளவுகோலாக்கி உ.பி. அரசு பணிநீக்கத்துடன் போலி ஆசிரியர்களின் ஊதியத்தையும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment