Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 18, 2019

5, 8ம் வகுப்புக்கு, 'ரேங்கிங்'

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை வந்தால், அதன் வாயிலாக, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, சில தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, 'ரேங்கிங் முறையை அமல்படுத்தக் கூடாது' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

'மத்திய அரசின் பரிந்துரைப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும், கே.வி., பள்ளிகள் இன்னும் முடிவு செய்ய வில்லை. ஆனால், அனைத்து நிர்வாக பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாக, தமிழக பள்ளி கல்வித்துறை, இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.



இந்நிலையில், இந்த ஆண்டே பொதுத்தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்யும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பொதுத்தேர்வு நடத்தப்படும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில, மாவட்ட அளவில், ரேங்கிங் முறையை அமல்படுத்த, தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.பொதுத்தேர்வில் முன்னிலை பெறும் மாணவர்களின் விபரங்களை வெளியிட்டு, அதன் வாயிலாக, தங்கள் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் நன்கொடையை உயர்த்தி கொள்ள, சில பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இந்த ஆலோசனைகளுக்கு, முதலிலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'ரேங்கிங்' முறை இல்லை என, பள்ளி கல்வித் துறை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment