Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 26, 2020

கொரோனாவை தடுக்க; உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வகையில் ஆயுஷ் ஆரோக்கியம் சிறப்பு திட்டம்: தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறை வெளியீடு


சென்னை: மனிதர்களுக்கு கொரோனா நோய் தாக்காமல் இருக்கவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் தமிழக அரசு ஆயுஷ் ஆரோக்கியம் சிறப்பு திட்டம் குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க இந்திய மருத்துவ முறையிலான மருந்துகளை எடுத்து கொள்வதின் மூலம், வாழ்வியல் முறை, உணவு கட்டுப்பாடு, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, அந்த முறையை பயன்படுத்த ஆயுஷ் அமைச்சகம் அறிவுரை வாங்கிஉள்ளது.
மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சில மருத்துவ முறைகளை அரசு வெளியிட்டுள்ளது:
* ஆயுர்வேத மருத்துவ முறை: இந்து காந்த கசாயம் 15 மில்லியுடன் காய்ச்சி ஆற வைத்து தண்ணீரை கலந்து உணவுக்கு முன்பாக ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். * குஷ்பந்தா ரசாயனம் அல்லது அகஸ்திய ரசாயனம் 10 கிராம் உணவுக்கு பிறகு எடுத்து கொள்ள வேண்டும். இதை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவ முறை
* மருத்துவர் பரிந்துரைப்படி கபசுரகுடிநீர்/நிலவேம்பு குடிநீரை பெரியவர்களுக்கு 60 மில்லி முதல் 90 மில்லி வரை தரலாம். குழந்தைகளுக்கு 30-45 மில்லி வரை தரலாம். இதை ஒரு மாத காலத்துக்கு உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
யோகா மற்றும் நேச்சுரோபதி முறை
இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய், துளசி, இஞ்சி, எலுமிச்சை சாறுடன் மஞ்சள் தூள் கலந்து பெரியவர்களுக்கு 250 மில்லி, சிறியவர்களுக்கு 100 மில்லி தினசரி இரண்டு முறை தர வேண்டும்.
* தோல் நீக்கப்பட்ட நசுக்கப்பட்ட இஞ்சி,துளசி, கருப்பு மிளகு, அதிமதுரம், மற்றும் மஞ்சள் கலந்து ஒரு நாளைக்கு 50 மில்லி வீதம் இரண்டு முறை பெரியவர்களும் 20 மில்லி வீதம் சிறியவர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* யோகா தெரபி: வஜ்ஜிரா ஆசனம், பாஸ்டிரிக்கா பிராயணாயாமா, பிராக்மாரி பிரயாணாயாமா, கிரியா.
* சூரிய குளியல்: தண்ணீர் தெரபி, அரோமா தெரபி ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை படி எடுத்து கொள்ள வேண்டும்.
யுனானி மருத்துவமுறை
பெகிதானா, உன்னாப், சாபிஸ்தான், டிகாக்ஸன் ஆகியவற்றை மருத்துவ பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹோமியோபதி
ஆர்செனிகம் ஆல்பம் 30 சி என்ற மருந்தை தினமும் ஒரு முறை உணவுக்கு முன்பாக மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிரயோனியா ஆல்பா, ரக்ஸ் டாக்சிகோ டெண்ட்ரான், பெல்லடோனா ஜெல்செமிமம் யுபாடோரியம், பெர்போலியோடம் உள்பட ஹோமியோ மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்து கொள்ள வேண்டும்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள்:
ஆயுர்வேதா முறை: தசமுல்லா காட்டுத்தராயம் கசாயம், இந்து காந்தம் கசாயம், வியாகிரியாதி கசாயம். இந்த மூன்று மருந்துகளை ரசாயனா ஸ்டிக்சாவை மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment