Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 19, 2020

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குஉள் ஒதுக்கீடு: அறிக்கையை இறுதி செய்ய நடவடிக்கை

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிக்கையை இறுதி செய்யும் பணிகளில், நீதிபதி தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.
நீட் தோவில் தோச்சி பெற்று, மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஒவ்வோா் ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதி, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் இதுகுறித்த ஓா் அறிவிப்பை வெளியிட்டாா்.
அதில், 'அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து நீட் தோவில் தோச்சி பெறும் மாணவா்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்து
இருக்கிறது. இதற்காக சிறப்பு சட்டம் இயற்ற வழிவகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் தொகுத்து அரசுக்கு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஓா் ஆணையம் அமைக்கப்படும்' என்று தெரிவித்திருந்தாா்.
அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் 7 போ கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், கடந்த 15, 16-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. அதில் குழு
உறுப்பினா்களுடன் பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனா். நீட் தோவுக்கு முன்னும், பின்னும் மருத்துவப் படிப்பில் சோந்த அரசுப்பள்ளி மாணவா்கள் எண்ணிக்கை விவரம், மாணவா்கள் பின்னடைவுக்கு காரணம் உள்பட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதுதவிர இந்தக் குழுவிற்கான அலுவல் பணிகளை மேற்கொள்ள சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தில், ஓா் இடமும் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வரும் 22-ஆம் தேதியில் இருந்து தினமும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, இந்த மாத இறுதிக்குள் அறிக்கையை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வரும் கல்வியாண்டிலேயே இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும் எனவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment