Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 19, 2021

சர்க்கரை நோயாளிகளுக்கு "அருமருந்தாகும்" முருங்கை.!!!

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை. முருங்கை இலையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. 


மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்த இலையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.


ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.


குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமன்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.


முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஒரேஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக விற்றமின் 'சி' கிடைக்கிறது.


முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது.


மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு.

No comments:

Post a Comment