Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 22, 2022

தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை இவ்வளவா?

தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 74 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத தரவுகளின்படி தமிழ்நாட்டில் 34,53,380 ஆண்களும், 39,45,861 பெண்களும். 271 மூன்றாம் பாலினத்தவரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். அதில் அதிகபட்சமாக 29, 88,000 மாணவர்கள் 19 முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்கின்றனர்.

46 வயது முதல் 60 வயது வரை சுமார் இரண்டரை லட்சம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,590 பேரும் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். கை, கால் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடு உடையோர் என மொத்தமாக 1,42,292 மாற்றுத்திறனாளிகளும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

பட்டப்படிப்புகளில் கலை படித்த 4 லட்சத்து 55 ஆயிரம் பேரும், அறிவியல் படித்த 6 லட்சத்து 84 ஆயிரம் பேரும், பொறியியல் படித்த 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்து உள்ளனர். 

இது தவிர முதுகலை பட்டப்படிப்புகளில் மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட படிப்புகளை படித்து பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment