THAMIZHKADAL TODAY NEWS

காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கியது. இந்த தேர்வுகள் நாளை வரை நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து, வரும் 26-ந்தே முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், ஓய்வு எடுக்கவும் இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது.

மேலும், பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5-ந்தேதி இரண்டாம் பருவத்திற்காக திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

சிறப்பு வகுப்புகள் மட்டுமின்றி காலாண்டு தேர்வில் பள்ளிகளில் இருந்து மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவும் தடை விதித்துள்ளது.

உத்தரவை மீறி வகுப்புகளோ (அ) சுற்றுலாவோ நடத்தப்பட்டு, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel