பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.11.2026



திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:55.செங்கோன்மை

குறள் எண்:544

குறள்:

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்:

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

பழமொழி :

Variety is the spice of life

மாற்றம் என்பது மானிட த் தத்துவம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நம் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் செயல்களும் நல்ல செயல்களாக அமையும் . 

 2. பள்ளிக்குத் தினமும் சரியான நேரத்திற்கு வருவேன்; நேரந்தவறாமையை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன்.

பொன்மொழி : 

அறிவால் உயர்வோம், அன்பால் இணைவோம், உழைப்பால் உலகை மாற்றுவோம்!

Thought for the Day :

Rise through knowledge, unite through kindness, and transform the world through hard work.

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டு எது? 

சிலம்பம். 

2. உலக சுனாமி விழிப்புணர்வு நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? 

நவம்பர் 5. 

English words :

1. Prudent - விவேகமான - Wise

2. Reluctant - தயக்கமுள்ள - Unwilling

புவியியலும் சுற்றுசூழலும் :

மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
* குப்பைகளைத் தெருக்களில் வீசக்கூடாது.
* மக்கும், மக்காத கழிவுகளைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்.
*ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
* நகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பது நகராட்சியின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.

NMMS :

MAT 

சுரேஷின் தந்தை லட்சுமியின் தாயின் சகோதரர். சுரேஷ் லட்சுமிக்கு என்ன உறவு?

A. Uncle / மாமா 

B. Brother / சகோதரர்

 C. Nephew / மருமகன்

 D. Cousin / உறவுச் சகோதரர்

விடை: உறவுச் சகோதரர்

நவம்பர் 20

திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்... 

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.

நீதிக்கதை

அறிமுகமில்லாதவர்களிடம் எச்சரிக்கை அவசியம்!

ஒரு அழகான கிராமத்தில் இனியா, கபீர் என்ற இரண்டு குழந்தைகள் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். பள்ளி முடிந்ததும் மகிழ்ச்சியாக வீட்டிற்குச் செல்வது அவர்களின் வழக்கம்.

ஒருநாள் பள்ளி முடிந்து  வீட்டிற்குச் செ ல்லும்போது, வழியில் ஒரு புதிய நபர் நின்று கொண்டிருந்தார். அவர் குழந்தைகளை அழைத்து,

"குழந்தைகளே ! என்னிடம் சுவையான சாக்லேட்டுகள் இருக்கின்றன. இருவரும் ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்!" என்றார்.

இனியாவுக்கு சாக்லேட் மிகவும் பிடிக்கும். உடனே அதை வாங்குவதற்காகக் கையை நீட்டினாள்.

ஆனால் கபீர் அவளை த் தடுத்து,

"இனியா! நமக்குத் தெரியாத நபர் கொடுக்கும் பொருளை வாங்கக்கூடாது என்று நம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். நாம் இதை வாங்க வேண்டாம். உடனே இங்கிருந்து செல்வோம்!" என்றான்.

அந்த நபர் மீண்டும், "பயப்படாதீர்கள் குழந்தைகளே ! நான் உங்களுக்கு நல்லதுதான் செய்கிறேன். இன்னும் நிறைய சாக்லேட்டுகள் தருகிறேன்!" என்று ஆசை காட்டினார்.

ஆனால் இருவரும் அவர் கொடுத்த எதையும் வாங்காமல், அருகிலிருந்த பள்ளி ஆசிரியரிடம் சென்று நடந்ததைக் கூறினர்.

ஆசிரியர் அவர்களை ப் பாராட்டி, "மிகவும் சரியான முடிவு எடுத்திருக்கிறீர்கள். அறிமுகமில்லாதவர்கள் கொடுக்கும் உணவு, தின்பண்டங்கள் அல்லது வேறு எந்தப் பொருளையும் பெரியவர்களிடம் கேட்காமல் வாங்கக்கூடாது. யாராவது வற்புறுத்தினால் உடனே பாதுகாப்பான இடத்திற்குச் சென்று பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ தெரிவிக்க வேண்டும்" என்று அறிவுரை கூறினார்.

அன்று வீட்டிற்குச் சென்ற குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமும் நடந்ததைக் கூறினர். பெ ற்றோர்கள் இருவரையும் பாராட்டி, எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அன்றிலிருந்து இனியாவும் கபீரும் தங்கள் நண்பர்களுக்கும் இந்தப் பாதுகாப்பு விதியை எடுத்துச் சொல்லத் தொடங்கினர்.

### நீதிக்கருத்து அறிமுகமில்லாதவர்கள் கொடுக்கும் உணவையோ பொருளையோ பெரியவர்களின் அனுமதியின்றி ஒருபோதும் வாங்கக்கூடாது. விழிப்புணர்வுடன் இருப்பதே நம் பாதுகாப்பு! 🌸 

இன்றைய செய்திகள்

20.11.2026


🗒️ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2.03 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்து சென்னை துறைமுகம் சாதனை.

🗒️ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கான புதிய மதிப்பீட்டு முறையானது ஏப்ரல் 1-ந் தேதி  அமலுக்கு வருகிறது.

🗒️33வது ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டில் ஜின்பிங்-டிரம்ப்- புதின் ஆகியோர் பங்கேற்பு.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏃🏻‍♀️டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரைஇறுதிக்கு தகுதி.

Today's Headlines

🗒️ Chennai Port has achieved a record by exporting 2.03 lakh tonnes of rice to African countries.

🗒️ A new tax assessment system for GST taxpayers will come into effect on April 1.

🗒️ Xi Jinping, Donald Trump and Vladimir Putin will participate in the 33rd Asia-Pacific Economic Conference.

🏀 Sports News

🏃🏻‍♀️ Tennis Championship: Spanish player Carlos Alcaraz has qualified for the semi-finals.

Covai women ICT_போதிமரம்

Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories