மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்

2026 சிறப்பு TET தேர்வை எதிர்கொள்ளுகின்ற, 2010-ஆம் ஆண்டிற்கு முன்பாக ஆரம்பப் பள்ளி முதல் பட்டதாரி ஆசிரியர் வரை பணியாற்றி வருகின்ற அரசு ஆசிரியர்களுக்கு, கீழ்க்கண்ட முறையில் சிறப்பு அரசாணை வெளியிட்டு உதவிடுமாறு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

*1. பணி அனுபவத்திற்கு மதிப்பெண்:*

ஆசிரியர்களின் பணி அனுபவத்திற்கு, ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

*2. தேர்வு முறை:*

அவர்கள் கற்பிக்கின்ற பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு வினாவும், உளவியல் மற்றும் பொது அறிவு சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு வினாவும் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்.

*3. தேர்ச்சி மதிப்பெண்:*

ஏற்கனவே இடஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளதால், இடஒதுக்கீடு இல்லாமல் பொதுப்படையாக 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

*4. பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள்:*

பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் முதல் அடித்தட்டு மக்கள் வரையில் ஒவ்வொருவரும் ஆசிரியர்களின் பொற்பாதங்களில் இருந்து தான் உருவாகின்றார்கள் என்பதை கருத்தில் கொண்டு, உள்ளன்புடன் கலந்த எங்கள் முதலமைச்சர் அவர்கள் இந்த சிறப்பு அரசாணையை வெளியிட்டு உதவிடுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories