வள்ளுவர் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள் அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று ஓளவையாரால் போற்றப்படும் திருக்குறள் , வாமண அவதாரத்தில் இரண்டடியால் உலகை அளந்த திருமால் போல , இரண்டடிகளால் நாடு , இனம் , மதம் , மொழி , சமயம் என அனைத்தையும் தாண்டி , உலக மக்களுக்குத் தேவையான அனைத்து நன்நெ…





