Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 29, 2018

வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்!!!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி.,யின், வன பயிற்சியாளர் பதவிக்கான, தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது

தமிழக அரசு துறையில், வன பயிற்சியாளர் பணிக்கான தேர்வு, செப்டம்பர், 23 முதல், 30 வரை நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது

ஆனால், இந்த நாட்களில், யு.பி.எஸ்.சி., என்ற, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது.எனவே, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த வன பயிற்சியாளர் தேர்வு, அக்., 9 முதல், 16 வரை நடத்தப்படும்

இதற்கான அறிவிப்பு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் தெரிவித்துள்ளார்