Subscribe Us

Saturday, July 21, 2018

மாணவியர் வருகை: பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர் வருகை குறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.



கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இப் பள்ளியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்ற பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

பள்ளிக்கு மாணவியரின் வருகை குறித்து, பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அவர்கள் மனநிம்மதியுடன் இருக்கலாம். 




இந்தியாவில்தான் தரமான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் அனைவரும் உயர் கல்வி பயில வேண்டும். அதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.

Popular Feed