SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Thursday, September 6, 2018

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செப். 18 முதல் செய்முறைத் தேர்வு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு செப். 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 



இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்தி: செப். 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.

அறிவியல் செய்முறைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஏற்கெனவே நடந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள், புதிய தேர்வர்கள் என அனைவரும், இந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாது. செய்முறைத் தேர்வு குறித்த விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.