Search This Blog

Saturday, September 29, 2018

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

0 comments
பந்தலுார் அருகே, அய்யன்கொல்லி மைதானத்தில், என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம், 31வது தமிழ்நாடு தனி அணி என்.சி.சி., அமைப்பின் சார்பில், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கான கூட்டு பயிற்சி முகாம், பந்தலுார் அய்யன்கொல்லி புனித தாமஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், கடந்த, 27 மாலை, 4:00 மணிக்கு துவங்கியது.

தொடர்ந்து, கோவை மண்டல கமாண்டர் கர்னல் பீட்டர் உத்தரவையடுத்து, நேற்று காலை பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள, 500 மாணவ, மாணவியருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, உடற்பயிற்சி நடத்தப்பட்டது.



இதனை, நீலகிரி கமாண்டர் லெப்டினென்ட் கர்னல் தேப் தலைமையில், என்.சி.சி. அதிகாரிகள் சுப்ரமணியன், சந்திரசேகர், விஜய், ராபர்ட், சீனிவாசன், ஜர்னல்சிங் ஆகியோர் அளித்தனர்.முகாமில், ஊட்டி அரசு கலைக்கல்லுாரி, கேத்தி பொறியியல் கல்லுாரி, நஞ்சநாடு, ஊட்டி ஜோசப், சி.எஸ்.ஐ., சி.எம்.எம்., எடக்காடு, மஞ்சூர், மேட்டுப்பாளையம், காட்டேரி, தேவர்சோலை, கூடலுார் மார்னிங்ஸ்டார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.