Subscribe Us

Monday, September 3, 2018

காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்கள்!!!

காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் செய்யப்பட்டது. காலி பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20 ஆயிரம் எனவும், குறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.



இதனையடுத்து காவல் துறைக்கு 81 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தது. இதில் பட்டதாரிகள் 50 ஆயிரம் பேர், முதுகலை பட்டதாரிகள் 28 ஆயிரம் பேரும், பிஎச்டி படித்தவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் என 81 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பியூன் வேலைக்கு குறைந்த பட்ச தகுதி 5-ம் வகுப்பு என்று இருந்தபோதிலும் எதிர்பாராத வகையில் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பதால் தற்காலிகமாக தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Popular Feed