JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கல்விக்கான பாடத்திட்டம் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக கல்வியாளர்கள், பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
ப்ரீகேஜி டூ யுகேஜி..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ?
ப்ரீகேஜி டூ யுகேஜி..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ?
தனியார் மற்றும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டு வரும் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் பொதுவான திட்டமாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் ப்ரீகேஜி, எல்.கேஜி, யு.கேஜி உள்ளிட்ட பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி வழியில் எஸ்.சி.இ.ஆ.ர்டி உருவாக்கி www.tnscert.org என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.