Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 27, 2024

Saturday, April 27, 2024

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு - தகுதி பட்டியலில் 330 பேர்

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான 330 அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்துமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்விஇயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறையின்கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு வட்டாரக்கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் வகையில், தகுதி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அவ்வாறு பெறப்பட்ட விவரங்கள் தொகுக்கப்பட்டு 2011 டிச.31-ம் தேதிக்கு முன்னர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த 330 நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஏதும் இருப்பின் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மாற்றம் ஏதுமில்லை எனில் அதன் விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும், பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இருப்பின் அதுசார்ந்த தகவலையும் உடனே இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, April 27, 2024

கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு


அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நடப்பு (2023-24) கல்வி ஆண்டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி, ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, 6, 7-ம் வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப்பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவுசெய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Saturday, April 27, 2024

பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்(எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெற்றோர் செயலியில் உள்ளீடு செய்யும் நடைமுறை அமலில் இருக்கிறது. 1,369 தீர்மானங்கள் மாணவர்களின் சீருடை அளவு சார்ந்தவைகளாக உள்ளன. எனவே, ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடை தைத்து வழங்குவதை எஸ்எம்சி குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கான சீருடைகள் தைத்தலை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அந்த சீருடைகளை தைப்பதற்கு சுய உதவிக்குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த ஒரு தையல் கலைஞரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அளவுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் எஸ்எம்சி மூலமாக பள்ளி மாணவர்களுக்கு அளவெடுத்து தைப்பதற்குத் தேவையான துணியின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளின் அளவு தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை தற்போது முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Saturday, April 27, 2024

நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்திஉட்பட 13 மொழிகளில் மே 5-ம்தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.

அவற்றை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறியலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in இணையதளத்தில் அறியலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
Saturday, April 27, 2024

2025-2026 முதல் இரண்டு பொதுத் தேர்வு முறை: சிபிஎஸ்இ ஆயத்தப் பணி தொடக்கம்

வரும் 2025-26 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வு முறையைக் கொண்டுவர மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆயத்தமாகும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆணைக்கு ஏற்ப சிபிஎஸ்இ பணிகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் மே மாதம் முதல் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்களுடன் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே கல்வியாண்டில் இரண்டு பொதுத் தேர்வு நடத்துவதற்கான கல்வி சார்ந்த கட்டமைப்பை வகுக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போதுள்ள நடைமுறைக்கு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் இது முன்னெடுக்கப்படுகிறது.

பருவத் தேர்வு முறையை அமல் செய்யும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தும் முறையினை 2024-25 கல்வியாண்டில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் 2025-26 கல்வியாண்டுக்கு அது மாற்றப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட அமைப்பு 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு பருவத் தேர்வை முன்மொழிந்திருந்தது. இதனை புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு கட்டமைத்தது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்வினை மாணவர்கள் அழுத்தமின்றி எதிர்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் நடைமுறை கொண்டு வரப்படுவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இது ஜேஇஇ பொறியியல் நுழைவுத் தேர்வு போல இருக்கும். மாணவர்கள் சிறந்த மதிப்பெண்ணை தேர்வு செய்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதுவது மாணவர்களின் விருப்பம் என்றும், அது கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்தது. இதற்கு முன்பும் பொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.
Saturday, April 27, 2024

JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.

இதில் முதன்மைத் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரியில் நடத்தப்பட்டு, முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்.4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 544 மையங்களில் 10.67 லட்சம் பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதையடுத்து மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இருகட்ட முதன்மைத் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் என்.முகுந்த் பிரதீஷ், என்.ராம் உட்பட 56 பேர் வரை முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுதவிர இரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/69227700 ஆகிய எண்கள் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
Saturday, April 27, 2024

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பை புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகம் போலவே புதுவையிலும் 10, 11, 12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஒன்று முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தை பொருத்து பள்ளிகள் திறகும் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையும் விரைவில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Saturday, April 27, 2024

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று நிதித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் முதல்வரின் முகவரி இணையதளத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்படுத்தும் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு, நிதித் துறை துணைச் செயலா் தே.கோபாலகிருஷ்ணன் பதிலளித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில், 1.4.2003 அன்று அல்லது அதன் பின்னரோ முறையான அரசுப் பணியில் சோ்ந்த பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை ரத்து செய்து அவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, April 27, 2024

வாட்ஸ் ஆப்பில் உள்ள மெட்டா AI கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்

வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்த அனைவருமே ஒரு விஷயத்தை கவனித்து இருக்க முடியும். சாட் வரிசைகள் இருக்கும் இடத்தில் புதிய சாட் உருவாக்கும் பட்டனுக்கு மேலே புதிதாக நீல நிறத்தில் ஒரு வட்டம் போன்ற ஆப்ஷனை கவனித்திருப்பீர்கள்.அது என்ன எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது?அதன் பயன்கள் என்ன?

அதை எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு தெரியுமா? அதை எல்லாமே இப்போது தெரிந்து கொள்ளலாம்.

OpenAI நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாட் பாட்டை நவம்பர் 2022 இல் கொண்டு வந்தது. இந்த சேட் பாட்டை பல வகைகளிலும் மக்கள் பயன்படுத்த தொடங்கினர். இதற்கான வரவேற்பும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில் நுட்பத்தை உருவாக்க தொடங்கினர்.

மெட்டா நிறுவனம் மெட்டா கனெக்ட் 2023 நிகழ்வின்போது மெட்டாAI என்ற செயற்கை தொழில்நுட்ப மெய் நிகர் உதவியாளரை(AI assistant ) உருவாக்கியது. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி மற்றும் OpenAI நிறுவனத்தின் ChatGPT போன்றவற்றிற்கு போட்டியாக மெட்டா நிறுவனம் இதை அறிமுகம் செய்தது.

Meta AI என்பது ஒரு பொது நோக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு கொண்ட அசிஸ்டன்ட் ஆகும். இது கேள்விகளுக்கு பதில் அளிப்பது, கட்டுரைகளை எழுதுவது, மொழிபெயர்ப்பது, படங்களை உருவாக்குவது போன்ற பல்வேறு பணிகளில் பயனர்களுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்துள்ளது.

முன்னதாக மெட்டா நிறுவனம் மைக்ரோசாப்ட் பிங்(Bing) உலாவியுடன் (browser) கூட்டு சேர்ந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டன. இதனைக் கொண்டு பயனர்கள் நிகழ் நேர தகவல்கள் தகவல்களை அணுகவும், படங்களை உருவாக்கவும் முடியும் என்று சோதித்து காட்டப்பட்டது.

2023 நவம்பரில் பல அமெரிக்க பயனர்கள் AI சேட் பாட் அணுக்களை பெற்றனர். ந்த சோதனைகள் எல்லாம் முடிந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் எக்ஸ் தளம், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயல்கள் மூலம் இந்திய பயனர்கள் மெட்டாAI சாட் பாட்டை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போதும் இது சோதனை கட்டத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



எப்படி பயன்படுத்துவது?வாட்ஸ் ஆப் செயலியில் புதிய செய்தி என்பதற்கு அருகிலேயே இந்த மெட்டா குறியீடு உள்ளது. அதை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய சேட் திறக்கும். அதில் நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உகந்த பதில்களை செயற்கை நுண்ணறிவு உங்களுக்கு சொல்லும். சந்தேகம், கேள்விகள் போன்றவற்றை நீங்கள் கேட்டால் அதற்கான பதில்களை அது தரும். உங்களுக்காக உங்கள் ரெஸ்யூமை கூட அதுவே தயார் செய்து கொடுக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ட்ரை பண்ணி பாருங்க

அது மட்டும் இல்லாமல் உங்கள் வாட்ஸ் ஆப் குரூப் சாட் மற்றும் தனிப்பட்ட சார்களில் கூட இந்த மெட்டாAI உதவியை பெறலாம் என்று whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட அல்லது குழு அரட்டைகளில் இருந்தாலும், தனிநபர்கள் செய்தி புலத்தில் "@" என்பதைத் தொடர்ந்து "Meta AI" என தட்டச்சு செய்வதன் மூலம் Meta AI இன் செயல்பாட்டைத் தொடங்கலாம்.

ஆனால் இது தற்போது குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டும் செயல்பட்டு வருகின்றன. மேலும் இது ஆங்கிலத்தை மட்டுமே உள்ளீடாக எடுத்துக் கொள்ளும். மற்ற மொழிகளை எடுத்துக் கொள்ளும் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை

கடந்த வாரம், மெட்டா நிறுவனம் மெட்டா AI இன் அப்டேட்டட் வெர்ஷன் லாமா 3ஐ அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட மெட்டா AI ஆனது, மெட்டாவின் செயலிகள் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணுகலை நெறிப்படுத்த, Meta ஆனது அதன் AI அசிஸ்டன்ட் ஆப்ஷனை வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசஞ்சர் போன்ற முக்கிய பயன்பாடுகளின் தேடல் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்துள்ளது.

இதை பற்றி பேசும்போது "நாங்கள் எங்களின் புதிய அதிநவீன Llama 3 AI மாடலுடன் Meta AI ஐ மேம்படுத்துகிறோம், இதை நாங்கள் ஓப்பன் சோர்சிங் செய்கிறோம். இந்த புதிய மாடலின் மூலம், Meta AI இப்போது நீங்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தக்கூடிய மிகவும் புத்திசாலித்தனமான AI உதவியாளராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். " என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்
Saturday, April 27, 2024

சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?

சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும்.

எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். கோயில்களுக்கு இரும்புப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சனிக்கிழமையில் செய்வது உத்தமம்.

சனிக்கிழமைகளில் எண்ணெய் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கக் கூடாது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும். அதாவது சனிக்கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால், எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்ததல்ல.

108 பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதில் உப்பு முதன்மையானது. உப்பை எப்பொழுதும் வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். தவறியும் சனிக்கிழமையில் வாங்குவதை நிறுத்தி விடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டு பின் ஜாடியில் போட்டு அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

மகாலட்சுமி தேவி துடைப்பம் போன்ற பொருட்களில் வாசம் செய்கிறாள். வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை எப்பொழுதும் சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. சனி பகவானுக்கு உரிய எள் சனிக்கிழமையில் வாங்கக் கூடாத பொருளாகும். எள் எண்ணெய் கொண்டு கோயிலில் சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வங்களும் அதிகரிக்கும்.

சமையலுக்குத் தேவைப்படும் மாவு போன்ற பொருட்களையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. வெள்ளிக்கிழமையில் மசாலா பொருட்களை வாங்குவதை மற்றும் அரைப்பதை தவிர்க்க வேண்டும்.

கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் தீராத துன்பமும் குடும்பத்தில் பிரச்னைகளும் உண்டாகும்.

சனிக்கிழமை அன்று புதிய ஆடைகளை வாங்கக் கூடாது. கருப்பு வஸ்திரம் வாங்கினால் தவறல்ல. சனிக்கிழமை அன்று அதேபோல் புதிய ஆடைகளையும் அணியக் கூடாது.
Saturday, April 27, 2024

மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள 2,236 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதில் உள்ள உபரி பணியிடங்கள் பணிநிரவல் செய்யப்படும். அதன்படி வரும் 2024-25-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இந்நிலையில் பணிநிரவல் கலந்தாய்வானது தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையையும் கருத்தில் கொண்டு நடத்தப்பட உள்ளது. எனவே, குறைந்த மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வியூகங்கள் அமைத்து சேர்க்கையை அதிகரிப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு தகவல்: கூடுதல் மாணவர்களை பள்ளிகளில் சேர்த்து உபரி பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், உபரியாக உள்ளவர்களின் விவரங்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி சார்ந்த ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, April 27, 2024

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!


1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு (G.O.Ms.No.193, Dated: 02.12.2011 - SSA, AZ Head) 30.06.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

(Already Shared here - Just a reshare.)

1282 BT Assistant Post Continuation Order👇

Saturday, April 27, 2024

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!


6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

Pay Order - Download here

Friday, April 26, 2024

Friday, April 26, 2024

இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்! & முன்னுரிமை பட்டியல் இணைப்பு...pdf


01.01.2024- நிலவரப்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 31.12.1997 க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்!

Dir Proceedings 26.04.2026 - Download here

SGT state seniority upto 31.12.1997👇

Friday, April 26, 2024

ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று , ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகின்றது.

எனவே . மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் . உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

DSE - Pension Benefits Proceedings👇

Friday, April 26, 2024

மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கும் நேர்வுகளில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - DSE & DEE இணைச் செயல்முறைகள்!


Corporal punishment remains a prevalent issue in various settings , including schools , hostels , and even within families . Shockingly , studies indicate that a significant percentage of children experience physical abuse , often at the hands of those entrusted with their care . The urgent need for concerted efforts to address and eliminate such harmful practices.

Under this circumstanceGuidelines for Elimination of Corporal Punishment in Schools issued :

Corporal Punishment in Schools - DSE & DEE Proceedings👇
Friday, April 26, 2024

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? - RTI Letter

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெற்ற தகவல்..

RTI Letter - Download here
Friday, April 26, 2024

Special SMC Meeting - 03.05.2024 அன்று நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 03.05.2024 ( வெள்ளிக் கிழமை ) - பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

அனைத்து வகை பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது மாதந்தோறும் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நடத்தப்பட்டு வருகிறது . இக்கல்வியாண்டில் ( 2023-2024 ) பொதுத்தேர்வு சார்ந்து 10 , 11 , 12 - ஆம் வகுப்பு மாணவர்களில் தேர்வுக்கு வாராதவர்கள் எவரென கண்டறிவதற்கும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவ , மாணவியர்கள் துணைத் தேர்வு எழுத ஊக்கப்படுத்துவதற்கும் , தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி குறித்தான வழிகாட்டுதல்களை பெறுவது குறித்தும் , விழிப்புணர்வு வழங்குவது சார்ந்தும் , பள்ளித் தேவைகளுக்கான நன்கொடைகள் முறைப்படுத்துதல் சார்ந்தும் கலந்துரையாட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டமானது 03.05.2024 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை அவசியம் நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

சிறப்புப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டப் பொருள் நிரல்கள்

SMC Special Meeting on 03.05.2024 👇

Friday, April 26, 2024

TNPSC - Departmental Exam May 2024 Notification Published




DEPARTMENTAL EXAM MAY 2024

Applications are invited from the candidates through " ONLINE " only for admission to the Departmental Examinations - MAY - 2024

The candidates are required to furnish their particulars in Departmental Examination One Time Registration before applying . Aadhaar Number details shall be linked with the Departmental Examination One Time Registration , mandatorily . If there is any change with regard to details entered in the One Time Registration , such as name , initial , father's name , date of birth , working district , etc. , the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations - MAY - 2024 . After submitting the application , any subsequent claim , with regard to change of test code / centre , corrections in name , father's name , age , date of birth , etc. , will not be entertained . Hence , the candidates are instructed to submit the applications with utmost care.

Candidates should submit their applications in on - line mode only . Other mode of applications will not be accepted and they will be rejected , even though the cost of application is enclosed with them .

TNPSC - Departmental Exam May 2024 Notification pdf👇👇👇