JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, October 16, 2018

குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு

அரசு ஊழியர் ஒருவரின் மனைவி குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்ட நாளிலிருந்து அரசு ஊழியருக்கு மருத்துவச் சான்றின் பேரில் 7 நாட்கள் விடுப்பு வழங்கப்படும்.



முதல் அறுவை சிகிச்சை பயனளிக்காதபோது மனைவி இரண்டாவது அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் ஏழு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் (அரசாணை எண் 470 நிர்வாகத்துறை நாள் 14. 11. 1 990)
இந்த விடுப்புடன் அரசு விடுமுறை அல்லது பிற விடுப்புகளை சேர்த்து எடுக்கலாம் .இந்த விடுப்புகளை சாதாரணமாக விடுப்பு வழங்கும் அலுவலரே வழங்கலாம்.( அரசாணை எண் 356, நல்வாழ்வுத்துறை நாள் :22. 2. 1982)

ஆண் அரசு ஊழியர் குடும்பநல அறுவை சிகிச்சை* *செய்துகொண்டால் எட்டு நாள் மட்டுமே விடுப்பு வழங்கப்படும் அடிப்படை விதி இணைப்பு 7 இன் விதி (2)உள்ள துணை விதி 7(ஏ)இன் கீழ்

அரசு பெண் ஊழியர் Non-Puerperal sterilization -அறுவை சிகிச்சை செய்து கொண்டால் 20 நாள் தற்செயல் விடுப்பு வழங்கலாம். மகப்பேறு காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு கிடைக்காது (மேற்படி விதி)



தற்காலிக பணியில் உள்ள திருமணமான பெண் ஊழியர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவருக்கு இருபது நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.  அரசாணை எண் 299. நல்வாழ்வுத்துறை* நாள் :10.
03.1982

*சில நேரங்களில் அறுவை சிகிச்சை காரணமாக மேற்படி விடுப்புக்கும் அதிகமாக சிறப்பு விடுப்பு தேவைப்பட்டால் மருத்துவ அலுவலர் சான்றின் பேரில் அதிகமான விடுப்பு வழங்கப்படும் அரசாணை எண் 644 நல்வாழ்வுத்துறை நாள் 25.1982.*