Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 7, 2018

ஐஏஎஸ் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் மதுரை காமராஜர் பல்கலை. அறிவிப்பு (பத்திரிகை செய்தி)


மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான அண்ணா நூற்றாண்டு சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி அகாடமியின் பயிற்சி இயக்குநர் எஸ்.மூக்கையா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:







மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழக அரசால் நடத் தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள் ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இலவச தங்குமிடத்துடன் உணவுப் படியாக ரூ.2 ஆயிரமும் வழங்கப் படுகிறது. 2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர் வுக்கான பயிற்சியில் சேர விண் ணப்பிப்பதற்கு கடைசி நாள் நவம்பர் 16-ம் தேதி (வெள்ளிக் கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. 



தகுதியுள்ள மாணவர்களை தேர்வுசெய்வதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 25-ம் தேதி (ஞாயிறு) நடத்தப்படும். கூடுதல் விவரங்களை www.mkuniversity.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப் பத்தை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.



No comments:

Post a Comment