Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 30, 2018

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அலட்சியம் வேண்டாம்


சிக்கன் குனியா காய்ச்சலின் அறிகுறிகள்

முதலில் மிகுதியான காய்ச்சலை உண்டாக்கும்.




அதிகமான உடல் வலி மற்றும் மூட்டு வலிகளை ஏற்படுத்தும்.

எலும்புக்குள் வலிகளை உண்டாக்கும்.

தோல்களில் அலர்ஜி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கண்வலி மற்றும் தலைவலியை உண்டாக்கி பிறகு காய்ச்சல் மட்டும் குறைய ஆரம்பிக்கும்.



இது ஒருவித வைரஸால் பரவுகின்றது.

டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகள்

நோய் கிருமிகள் நமது உடலில் நுழைந்து தொடர்ந்து காய்ச்சலை ஏற்படுத்தும்.

மேலும், தலைவலி, உடல்வலி, வயிற்றுவலி போன்ற வலிகளை உண்டாக்கும்.

இதேபோல், நாளுக்கு நாள் அதிக அளவில் வலிகளையும்,கடுமையான காய்ச்சலையும் உண்டாக்கும்.



பகலை விட இரவில் காய்ச்சலை அதிகரிக்கச் செய்யும்.

வாந்தி மற்றும் பசியின்மையை உண்டாக்கும்.


உடலை சோர்வடைய செய்யும் மற்றும் மயக்கதையும் ஏற்படுத்தும். மேலும், உடல் எடையை குறைக்க செய்யும்.

கால்களில் வீக்கத்தை உண்டாக்கும்.

நாவில் வெண்மையான படலங்களை உண்டாக்கும்.

வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை உண்டாக்கும்.

வறட்டு இருமலை ஏற்படுத்தும்.

மேலும், கண்களில் சோர்வு தன்மையை உண்டாக்கும்.




உடலில் அரிப்புகளை உண்டாக்கும் மற்றும் தோல்களில் ரோஸ் நிற புள்ளிகளை ஏற்படுத்தும். காய்ச்சலின் கடைசி நிலையில் சிறுகுடலில் இரத்தக்கசிவை உண்டாக்கி ஆபத்தான நிலையை உண்டாக்கும்.

எனவே இந்த மாதிரி அறிகுறிகள் 2 நாட்களுக்கு மேல் தென்பட்டால் தாமதிக்காமல் இரத்த பரிசோதனை எடுத்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment