Wednesday, December 5, 2018

அரசு மலைப்பள்ளியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்




சேலம்மாவட்டம்,பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் மண்ணூர் மலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ரோகிணி அவர்கள் வேளாண்மைத்துறை சார்பில் மண்ணூர், நடுநிலைப்பள்ளியில் இயற்கை உரங்கள் மூலம் பயிர் செய்யப்படும் பயிர்களின் கண்காட்சி மற்றும் விவசாயிகளுடன் ஜ் கலந்துரையாடினார்.



முன்னதாக மண்ணூர், நடுநிலைப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு சார்பில் நன்கொடையாளர்கள் மூலம் கட்டிய பள்ளி நுழைவு கேட்டினை திறந்து வைத்தார்.பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.மேலும் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் அனைத்து வகுப்பிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும்,சிறப்பாக பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கேடயம் வழங்கி பாராட்டினார்.











No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News