
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
பொதுச் செய்திகள்
» புதிய செயலி... அவசர காலத்திற்கு தொடர்பு கொள்ள நாடு முழுவதும் ஒரே செயலி
புதிய செயலி... அவசர காலத்திற்கு தொடர்பு கொள்ள நாடு முழுவதும் ஒரே செயலி

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தியாவில் தனித்தனியாகப் பல அவசரகால கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் பலத்துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. காவல்துறைக்கு 100, தீயணைப்புத்துறைக்கு 101 ஆகிய எண்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன.
ஆனால் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அனைத்து உதவிகளுக்கும் ஒரே பொதுவான எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அது போன்ற வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தும் விதமாக 112 என்ற எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அப்போது 'இந்த செயலிலியில் ஷவுட் (shout) என்ற வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பிரச்சனையில் சிக்கும் பெண்கள் அருகில் உள்ள அவசர உதவி மையத்தை அணுகி உதவி பெறலாம்.'
இந்த செயலியின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது









No comments:
Post a Comment