THAMIZHKADAL TODAY NEWS

சென்னை உட்பட, எட்டு கடலோர மாவட்டங்களுக்கு, இன்று கன மழை எச்சரிக்கை

சென்னை உட்பட, எட்டு கடலோர மாவட்டங்களுக்கு, இன்று கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழை பெய்யலாம்.



நாளை, சில இடங்களில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும். நாளை மறுநாள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று லேசான மழை பெய்தது. மாலை முதல் அதிகாலை வரை, மலைப்பகுதி மாவட்டங்களில் பனி மூட்டம் காணப்பட்டது.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel