THAMIZHKADAL TODAY NEWS

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றக் கிளையில் முறையீடு














ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு *தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.*

நாளை முதல் நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், அதோடு சேர்த்து *இன்று மதியம் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.*

டிசம்பர் 10ம் தேதி அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.



இதையடுத்து அவசர வழக்காக மதியம் ஒரு மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

சென்னையில் தொடரப்பட்ட முறையீட்டு மனுவை *அவசர வழக்காக* விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மதுரைக் கிளையில் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது.



Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel