Search This Blog

Monday, January 7, 2019

அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

0 comments
இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை/பிற்பகல் இருவேளைகளிலும் TN Schools Attendance Application மூலம் மாணவர்களின் வருகையை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.




பல பள்ளிகள் Updated version யை பயன்படுத்தாத காரணத்தால் Report யில் பல பள்ளிகள் இப்பணியை செய்யாதது போல் காண்பிக்கிறது

எனவே தினந்தோறும் play store சென்று TN School Attendance Application யை update செய்ய வேண்டும்.

தற்போது version 2.1.2 யை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதி செய்யவும்.

Home page யில் Right Side Top Corner யில் மூன்று வெள்ளை கோடுகள் காணப்படும். இதை press செய்து பார்க்கலாம்.




Internet சரியாக கிடைக்காத காரணத்தால் சில நேரங்களில் பதிவு சர்வரில் பதியாது. இதற்கு இதே பகுதியில் பச்சை நிறத்தில் உள்ள ATTENDANCE SYNC யை (SYNC - Synchronization) Press செய்தால் சர்வரில் பதிவாகும்.

07.01.2019 முதல் Updated Version யில் பதிவு மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து இப்பணி செய்து வரும் விபரத்தை உங்கள் பள்ளியை பார்வையிடும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு தவறாது தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாநில/மாவட்ட கல்வி அதிகாரிகள் இப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால் இப்பணியை சரியாக செய்து வர அனைத்து வகை அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்