
விடுமுறை எப்போது கிடைக்கும் என காத்திருக்கும் மாணவர்களுக்கு குஷியான தகவலாக செப்டம்பர் மாதம் 13 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது.
விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான் அந்த வகையில், எப்போது தொடர் விடுமுறை கிடைக்கும் வெளியூர் செல்லலாம், உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என திட்டமிடுபவர்களுக்கு குஷியான மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது.
அந்த வகையில் தொடர் விடுமுறை கிடைக்காத என ஏங்கி தவித்த அரசு ஊழியர்களுக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறையாக இரண்டு முறை செப்டம்பர் மாதத்தில் வரவுள்ளது. அந்த வகையில வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக உள்ளது. அடுத்தது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாள் விடுமுறையாக அமைந்துள்ளது என 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.
செப்டம்பரில் கொத்தாக விடுமுறை
இதே போல செப்டம்பர் 12ஆம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையாக விடுமுறையாகும், அடுத்தாக 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், 14 ஆம் தேதி திங்கட் கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தொடர்ந்து 3 நாள் விடுமுறையாக உள்ளதால் சுற்றுலா செல்பவர்களுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்ததாக பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்த காலாண்டு விடுமுறையானது செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே செப்டம்பர் மாதத்தில் மட்டும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை என மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மகிழ்ச்சியான மாதமாக அமைய உள்ளது.
No comments:
Post a Comment