Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 5, 2019

தமிழக அரசு அதிரடி: இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசு!



பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் ஓரிரு நாள்களில் தொடங்கப்பட உள்ளது. இந்தத் தொகுப்புடன், ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு ரூ.1000-மும் சேர்த்து அளிக்கப்படுகிறது.



தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி, சர்க்கரை, உலர்திராட்சை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில், சட்டப் பேரவையில் ஆளுநர் புதன்கிழமை உரையாற்றிய போது, பொங்கலை ஒட்டி, குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றார்.



பொங்கல் பரிசு தொகுப்பினை அளிப்பதற்கான அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.258 கோடி செலவில் பொங்கல் பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (1.98 கோடி) அளிக்கப்பட உள்ளது. மேலும், குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய்க்கான அரசு உத்தரவு ஓரிரு நாள்களில் பிறப்பிக்கப்பட உள்ளது. ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு பை அளிக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஓரிரு நாள்களில் தொடங்கி வைக்க உள்ளார்.



திங்கள்கிழமை இந்தத் திட்டம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதன்பின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள் எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.