Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 24, 2019

கிளாட்' நுழைவு தேர்வு மார்ச், 31 வரை அவகாசம்


சென்னைதேசிய சட்ட பல்கலையில் சேர்வதற்கான, நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, மார்ச், 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 21 இடங்களில், தேசிய சட்ட பல்கலைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், திருச்சியில், தேசிய சட்ட பல்கலை செயல்படுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த கல்லுாரிகளில், எல்.எல்.பி., படிப்புகளில் சேர, 'கிளாட்' என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


நடப்பாண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில், தேசிய சட்ட பல்கலையில் சேர்வதற்கு, கிளாட் நுழைவு தேர்வு, மே, 12ல் நடக்க உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, ஜனவரியில் துவங்கியது; மார்ச், 31ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://clatconsortiumofnlu.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.<