Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 2, 2019

அரசு வேலைவாய்ப்புக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு


அரசு வேலைவாய்ப்புக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் திருமா பயிலகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:



தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான கட்டணமில்லா பயிற்சியை திருமா பயிலகம் கடந்த பல ஆண்டுகளாக அளித்து வருகிறது.



சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் திடலில் இயங்கி வரும் இந்தப் பயிலகத்தில், திறன்வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 8610392275, 9042991182, 9566065523 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் மூலம் சென்னை அலுவலகத்தையும், 9952860844, 9865936454 என்ற செல்லிடப்பேசி எண்கள் மூலம் ஜெயங்கொண்டம் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி: thirumapayilagam@gmail.com