THAMIZHKADAL TODAY NEWS

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யின் புதிய துணைவேந்தராக கே. பிச்சுமணி பொறுப்பேற்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கே. பிச்சுமணி சனிக்கிழமை பொறுப்பேற்றார். இவர், இப்பல்கலைக்கழகத்தின் 9-ஆவது துணைவேந்தர் ஆவார். இப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கி. பாஸ்கரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கே. பிச்சுமணி சனிக்கிழமை பொறுப்பேற்றார்.


முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர் சுந்தரனார், திருவள்ளுவர் சிலைகளுக்கு புதிய துணைவேந்தர் கே. பிச்சுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் துணைவேந்தர் கே. பிச்சுமணிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.


கே. பிச்சுமணி துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் பணியாக நாகர்கோவிலில் உள்ள அரசுக் கலைக் கல்லூரிக்கு மத்திய அரசின் "2எஃப்-12பி' அந்தஸ்து பெறுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel