Breaking

Friday, February 15, 2019

இந்திய விமானப் படையின் முதல் பெண் பொறியாளர்!


பஞ்சாப் மாநிலம், சண்டீகரை சேர்ந்த ஹினா ஜெய்ஸ்வால், இந்திய விமானப் படையின்(ஐஏஎஃப்) முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையை பெறுகிறார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியாளர் (பி.இ.) பட்டம் பெற்றுள்ள இந்த இளம் பெண், இந்திய விமானப் படையின் பொறியாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.



ஐஏஎஃப்பின் முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையை பெறும் ஹினா ஜெய்ஸ்வால், நாளடைவில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் பிரிவுக்கும் (இயக்கம்) தலைமைத் தாங்க உள்ளார். ஐஏஎஃப்பில் ஆறு மாத கால பயிற்சியை சிறப்பாக முடித்ததையடுத்து, இன்று அவர் விமானப் படையில் பொறியாளராக முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளார். "ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற தமது பிள்ளைப் பருவ கனவு தற்போது நனவாகி உள்ளது" என பெருமைப்பட கூறுகிறார் ஹினா ஜெய்ஸ்வால். அவரது பெற்றோருக்கு ஹினா ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.