Subscribe Us

Tuesday, February 19, 2019

இந்த செடிக்கு பேரே இன்சுலின் செடியாம். இது தெரியாம நாம சர்க்கரை நோய்க்கு மாத்திரை!!!


சர்க்கரை நோய் என்றாலே 'அது பணக்காரர்களுக்கு வரும் நோய்' என்பார்கள். ஆனால் தற்போது அது எல்லா தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த சர்க்கரை நோய் வேகமாக பரவி வருகிறது என்பது தான் உண்மை.

அதிலும் இந்தியாவில் ஏராளமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்படைந்துள்ளனர். எனவே இது குறித்து புதுசு புதுசா ஆராய்ச்சிகளும் புதுப் புது மருந்துகளும் கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். அப்படி தற்போது கொண்டு வரப்பட்ட ஒன்று தான் இந்த இன்சுலின் செடி என்பது. இது ஒரு மேஜிக்கல், இயற்கை மூலிகை என்றே கூறலாம். இந்த செடியை கொண்டு சர்க்கரை நோய் மட்டுமல்லாது சிறுநீரகக் கற்கள், இரத்த அழுத்தம் மற்ற பிரச்சினைகளையும் சரி செய்ய இயலும். கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் நீரிழிவு நோய்களின் தாக்கம் பெருமளவு அதிகரித்து உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.



இன்சுலின் செடி

இதனால் காஸ்டஸ் பிக்டஸ் என்ற இந்த இன்சுலின் செடியின் தேவையும் இப்பொழுது அதிகரித்து வருகிறது.' இந்த இன்சுலின் செடி இருந்தாலே போதும் உங்கள் சர்க்கரை நோய்க்கு பை பை' சொல்லிடலாம் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்களும் பரவி வருகிறது. இது நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாது ஆரோக்கியமாக உடலை பேண விரும்புவர்களுக்கும் பயன்களை அள்ளித் தருகிறது.

Popular Feed